தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கு சிறீதரன் எம்.பி அழைப்பு.!

பொது எதிரியை எதிர்கொள்வதற்காக எமக்குள் உள்ள எதிர்ப்புணர்வுகளை புறம்தள்ளி, தனிப்பட்ட நலன்களை முன்னிறுத்தாது இன நலன்களை முன்னிறுத்தும் ஓர் கூட்டுத் தலைமையின் உருவாக்கம் குறித்து சிந்திப்பதோடு, தமிழ்த்தேசியத் தளத்தில் இயங்கும் ஒவ்வொரு கட்சிகளினதும் மரபார்ந்த தனித்துவங்களைப் பேணியவாறு, தேர்தல் கூட்டாக அன்றி தேசத்தின் கூட்டாக, கூட்டமைப்பை மீள உருவாக்குவதற்கு தமிழ்த் தேசியத் தலைவர்கள் ஒவ்வொருவரும் ஒத்;துழைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அழைப்பு விடுத்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது […]

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பெருந்தலைவருக்கு அஞ்சலி!

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பெருந்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அவர்களின் புகழுடலுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் இன்றையதினம் அஞ்சலி செலுத்தினார்!

கடைசியாக ஸ்ரீதரனிடம் எடுத்துரைத்த சம்மந்தர் ஐயா!

தமிழ்மக்களுக்காக முழுமையாக அர்பணியுங்கள் என தமிழரசுக் கட்சிக்கு போட்டி மூலம் புதிதாக தெரிவு செய்யப்பட்ட தமிழரசுக் கட்சியின் தலைவர் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனிடம் இறுதியாக எடுத்துரைத்தார் பெருந்தலைவர் சம்மந்தன் ஐயா.. இன்று அவர் விட்டு சென்ற தமிழ் தேச மக்களுக்கான பணியினை அவர் மீதும் கட்சி மீதும் நம்பிக்கை கொண்ட உள்ளங்கள் யாவரும் அவருடைய எண்ணங்கள், சிந்தனைகளை ஏற்று செயற்படுவதே பெருந்தலைவருக்கு செய்யும் மரியாதையாகும்..

கெளரவ. இராஜவரோதயம் சம்பந்தன் ஐயா அவர்களுக்கு கிளிநொச்சியில் அஞ்சலி நிகழ்வுகள்.

நேற்றைய தினம் மறைந்த, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பெருந்தலைவரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான, கெளரவ. இராஜவரோதயம் சம்பந்தன் ஐயா அவர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டப் பணிமனையான அறிவகத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் தலைமையில் இன்று காலை நடைபெற்றதுடன், துயரின் வெளிப்பாடாக மாவட்டப் பணிமனை முன்றலில் கட்சிக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.

விளிம்புநிலை அரச உத்தியோகத்தர்களின் காணிகள் பறிபோகும் அபாயம்..

முடிக்குரிய காணிகள் கட்டளைச் சட்டம் தொடர்பில் கடந்த 21ஆம் திகதிய பாராளுமன்ற அமர்வில் நடைபெற்ற விவாதம் சார்ந்து உரையாற்றிய போதே அவர் மேற்படி கோரிக்கையைப் பதிவுசெய்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் யாழ்.திருநெல்வேலி அரசினர் விவசாயப் பாடசாலை, வட்டக்கச்சி அரசினர் விவசாயப் பாடசாலை, கண்டி குண்டகசாலை அரசினர் விவசாயப் பாடசாலைகளில் கல்விகற்றவர்களையும், அக்காலத்தில் 8ம் வகுப்பு சித்தியடைந்தவர்களையும்,1930 களிலும், அதன் பின்னர் 1950களிலும் விவசாயத்தை மையப்படுத்தி குடியேற்றியதன் மூலம் உருவாக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்தில், […]

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் சந்திப்பு!

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உடனான சந்திப்பானது இன்றைய தினம் இடம்பெற்றது இதில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 8 பேர் கொண்ட குழுவினர் பங்குபற்றி இருந்தார்கள். இக்கலந்துரையாடலில் குறிப்பாக எமது வடக்கு கிழக்கு மாகாண அபிவிருத்தி, அதிகாரப்பகிர்வு சமகால அரசியல் நிலவரம் தொடர்பான பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடப்பட்டது. மேலதிக தகவல் தமிழ் எம்பிக்களை சந்தித்த ஜெய்சங்கர்! வெளியானது கலந்துரையாடப்பட்ட முக்கிய விடயங்கள்

வடக்கு கிழக்கிலே தமிழர்கள் இன்றும் அச்சுறுத்தலோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்..

விடுதலைப் புலிகளை மீளவும் உருவாக்குகின்றார்கள் என்கின்ற போர்வையில் கைது செய்வதும். தமிழ் இளைஞர் யுவதிகளையும் தொடர்ச்சியாக இலங்கையினுடைய புலனாய்வுத் துறையினர் விசாரணைகள் மேற்கொள்வதும் வடக்கு கிழக்கிலே தமிழர்கள் இன்றும் அச்சுறுத்தலோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதற்கு சிறந்த உதாரணம். ஆகவே தமிழர்கள் எதைச் செய்தாலும் எதை பேசினாலும் சிங்களவர்களுடைய பார்வையில் அது புலிகளைப் போன்றே காட்சியளிக்கின்றது. ஆகவே இவற்றிலிருந்து சிங்கள பேரினவாதிகள் விடுபட வேண்டுமாக இருந்தால் விடுதலைப்புலிகள் ஏன் தோற்றம் பெற்றார்கள் என்பதை சரியான முறையில் ஆய்வு […]

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக பொருளாதார உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய சிறீதரன்.

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக பொருளாதார உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய சிறீதரன் எம்.பி, தாயகத்தில் செயல்வலுமிக்க பொருளாதார கட்டமைப்புகளை உருவாக்குதல், வடக்கு, கிழக்கில் நிலைபேறான முதலீடுகள் மூலம் இளைஞர், யுவதிகளுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டியதன் முக்கியத்துவம் மற்றும் தற்போதைய அரசியல் பொருளாதார களச்சூழல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கருத்துரைத்திருந்தார்.

மறைந்த ‘மாமனிதர்” மருத்துவர்.ஜெயகுலராஜா

மறைந்த ‘மாமனிதர்” மருத்துவர்.ஜெயகுலராஜா அவர்களுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொடி போர்த்தி, புகழ் மரியாதை செலுத்தினார்