வடக்கு – கிழக்கு மாகாண சபையின் பொறுப்புகளைப் போராளிகளிடம் ஒப்படையுங்கள்: சிறீதரன் எம்.பி அறைகூவல்! (VIDEO)

“நாம் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து, வடக்கு – கிழக்கு மாகாண சபையின் பொறுப்புகளைப் போராளிகளிடம் ஒப்படைத்து, சிறந்ததொரு அரசியல் சூழலை உருவாக்குவதற்கும், அதற்காக முன்னின்று உழைப்பதற்கும் நான் தயாராக இருக்கிறேன். இத்தகைய வரலாற்றுப் பணியைச் செய்ய எல்லோரும் தயாரா? ” என போராளிகள் நலன்புரிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விருது வழங்கள் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போது சிறீதரன் எம்.பி இவ்வாறு தெரிவித்தார். ஆளுமையுள்ள போராளிகளை வெறுமனவே அரசியலுக்குப் பயன்படுத்துவதோ அல்லது வாக்குக் கேட்பதற்கான கருவிகளாக மாற்றுவதோ […]
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்த சிறீதரன் எம்.பி!

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களை நேற்றைய தினம் நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார். இச் சந்திப்பின் போது, தாயகத்தில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சமகால அரசியல் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக, தமிழர்களின் பூர்வீக இந்து ஆலயங்கள் இடிக்கப்பட்டு, அவ்விடங்களில் திட்டமிட்ட முறையில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றமை மற்றும் செம்மணி மனிதப் […]
மாணவர்கள் அனைவரும் அதிமானிடக் கோட்பாட்டை நோக்கி நகர வேண்டும் என சிறீதரன் எம்.பி. தெரிவிப்பு…!

“மனிதன் என்பது விலங்குக்கும் அதிமானிடனுக்கும் இடையே கட்டப்பட்ட ஒரு கயிறு. அத்தகைய பலவீனங்களாலும் எதிர்மறைச் சிந்தனைகளாலும் கட்டப்பட்ட அந்தக் கயிற்றை அறுத்து, நாம் அதிமானுடர்களாக நிமிர வேண்டும்” என மாணவர் சமுதாயத்தின் முன்னிலையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். ஜெர்மனியின் புகழ்பெற்ற தத்துவஞானி பிரீட்ரிக் நீட்ஷே (Friedrich Nietzsche) அவர்களின் புகழ்பெற்ற ‘அப்படியும் பேசினார் ஜரதுஸ்ட்ரா’ (Thus Spoke Zarathustra) என்னும் நூலில்“மனிதன் என்பவன் ஒரு நிலையான உயிரினம் அல்ல. […]
செம்மணி மனிதப் புதைகுழி: தமிழினப் படுகொலையின் அசைக்க முடியாத சாட்சி! – சிறீதரன் எம்.பி!

இலங்கையில் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலையின் அசைக்க முடியாத சாட்சியாகவும், இந்த நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பெரும் அவமானத்தின் அடையாளமாகவும் செம்மணி மனிதப் புதைகுழி உருவெடுத்துள்ளது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். தமிழர்கள் மீது புரியப்பட்ட இந்த இனப்படுகொலையைச் சர்வதேச சமூகம் இனியாவது ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதையே இந்தப் புதைகுழியில் இருந்து மீட்டெடுக்கப்படும் என்புத் தொகுதிகள் உலகுக்குப் பறைசாற்றுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார். […]
மயிலிட்டி மக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்!

யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி மயிலிட்டி மக்கள் இன்றைய தினம் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, வடக்கு மாகாண ஆளுநரிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை உத்தியோகபூர்வமாகக் கையளித்துள்ளனர். கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி இடம்பெயர்ந்த தமது மக்கள், 36 வருடங்கள் நிறைவடைந்த நிலையிலும் இன்னமும் அகதிகளாகவே வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ள அவர்கள், மாண்புமிகு ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக இரு பிரதான கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அதன்படி, […]
35 ஆண்டுகால நில ஆக்கிரமிப்பும் மீனவர்களின் அவலமும்: நாடாளுமன்றத்தில் ஒலித்த தமிழ் மக்களின் குரல்! (VIDEO)

மிக முக்கியமாக கடந்த மே மாசம் 27ஆம் தேதி புதன்கிழமை யாழ்ப்பாணம் மாவட்டத்தினுடைய பருத்தித்துறை முனை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு சென்றிருந்தார்கள். அந்த மீனவர்களிலே நான்கு பேர் இதுவரை இன்னும் வீடு திரும்பவில்லை. அரசாங்கத்தினால் அவ்வாறு சென்றவர்களை கொண்டு வருவதற்கான, தேடி கண்டுபிடிப்பதற்கான சரியான நடவடிக்கைகள் உரிய நேரத்தில் மேற்கொள்ளப்படவில்லை என்பதையே அந்த பகுதி எங்களுடைய மீனவ சகோதரர்கள் எங்களிடம் முறையிட்டுருக்கிறார்கள் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் […]
இலங்கை மற்றும் மாலதீவுகளுக்கான சுவிட்சர்லாந்து நாட்டின் தூதுவரை சந்தித்து, நன்றி தெரிவித்த சிறீதரன் எம்.பி!

கடந்த ஞாயிற்றுக்கிழமை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள், இலங்கை மற்றும் மாலதீவுகளுக்கான சுவிட்சர்லாந்து நாட்டின் தூதுவரான டாக்டர் சிரி வோல்ட் (Dr. Siri Walt) அவர்களை சந்தித்து, அவரது பணிக்கால சேவைகளுக்காக நன்றி தெரிவித்தார். இச்சந்திப்பின் போது, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் வாழ்வாதாரம், மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் ஜனநாயக முன்னேற்றம் தொடர்பாக தூதுவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக சிறீதரன் எம்.பி. தனது பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்ததோடு, நினைவுச் […]
சங்கீத்சனின் விடுதலை விவகாரம்: ஜனாதிபதி அநுர – சிறிதரன் எம்.பி இடையே தொலைபேசி உரையாடல்!

சொல்லிசைக் கலைஞரான சங்கீத்சனின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமாரவுக்கும், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரனுக்கும் இடையில் தொலைபேசி உரையொன்று நடைபெற்றுள்ளது. குறித்த உரையாடலுக்கு அமைவாக, சங்கீத்சனுக்கு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்படாமையின் காரணமாக சாதாரண நீதிமன்ற முறைமையின் கீழ் அவருக்கான பிணைக்கோரிக்கையை சட்டத்தரணிகள் ஊடாக விடுக்க முடியும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சிறிதரன் எம்.பியிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, அமைச்சர் சந்திரசேகரருக்கும், சிறிதரன் […]
“வடக்கு கிழக்கு தழுவிய மாபெரும் போராட்டம் வெடிக்கும்!” நாடாளுமன்றத்தில் சிறீதரன் எம்.பி (VIDEO)

இன்றைய தினம் அவசர கால சட்டத்தோடு சேர்ந்த வகையில் நீடிப்பு செய்வதற்கான பிரேரணையை ஜனாதிபதியினால் கொண்டுவரப்பட்டிருக்கிற இந்த சூழலில், இந்த நாட்டிலே பல்வேறுபட்ட துயர நிகழ்வுகளும் துன்பங்களும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஊடாக கொண்டுவரப்பட்டிருக்கிற இந்த காலச்சூழல் மிகவும் பயங்கரமானதாக இந்த நாட்டிலே இருக்கின்றது என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (09) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் […]
யாழ் சிறையில் உள்ள சொல்லிசைப் பாடகர் சங்கீத்சனை நேரில் சந்தித்தார் சிறீதரன் எம்.பி!

எழுச்சிப் பாடல் பாடி, அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைப் பாடகர் கணேஸ்குமார் சங்கீத்சனை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் யாழ்ப்பாண சிறைச்சாலைக்குச் சென்று நேரில் பார்வையிட்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் எழுச்சிப் பாடல்களைப் பாடிப் பகிர்ந்த குற்றச்சாட்டின் கீழ், கிளிநொச்சியைச் சேர்ந்த சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார் சங்கீத்சன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அண்மையில் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாண […]
பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சொல்லிசைக் கலைஞனை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி கடிதம்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார் சங்கீத்சன் அவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஜனாதிபதிக்கு விசேட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், “பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள உதயநகர் மேற்கு, கிளிநொச்சியை நிரந்தர முகவரியாகக் கொண்ட சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார் சங்கீத்சன் அவர்களின் விடுதலை தொடர்பான விடயத்தினை தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டுவருகின்றேன். தனது இனத்தின் […]
பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக எழுச்சி கொண்டது தமிழர் தாயகம்! சொல்லிசைக் கலைஞனை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

அரச பயங்கரவாதத்தின் கீழ், பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தித் திட்டமிட்டுக் கைது செய்யப்பட்டுள்ள தாயகக் கலைஞனை விடுவிக்கக் கோரி, மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்றைய தினம் கிளிநொச்சி பழைய கச்சேரி முன்பாகப் பெரும் திரளான இளைஞர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது. ”குரல்வளையின் விலங்குடைக்க அணிதிரள்வோம்” என்னும் பொருண்மையில், கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் சங்கீத்சனை விடுதலை செய்யக் கோரியும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் ஊடாகத் தமிழர்கள் மீது நிகழ்த்தப்படும் இன அடக்குமுறைகளைக் கண்டித்தும், கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புகளின் […]