பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கி வைப்பு!

கனடா, மொன்றியல் வாழ் அன்பரது நிதிப் பங்களிப்பில் பல்கலைக்கழக மாணவர்களுக்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு அண்மையில் கிளிநொச்சியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றிய வட மாகாண மேனாள் கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா அவர்கள்:”கல்வி என்பது ஒரு தனிமனிதனின் வளர்ச்சி மட்டுமல்ல, அது ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கான திறவுகோலாகும். இன்று புலம்பெயர்ந்து கனடா, மொன்றியல் நகரில் வாழ்ந்தாலும், தமது வேர்களை மறக்காது எமது மண்ணின் மாணவர்களின் உயர்கல்விக் கனவுகளுக்கு உரமூட்டும் அந்த உறவுகளின் உயரிய மனப்பாங்கினை நான் […]
“நயம் பேசு” நூல் வெளியீடு…!

எழுத்தாளரும் தமிழாசிரியருமான இரா. நிஷாந்தன் எழுதிய “நயம் பேசு” நூல் வெளியீட்டு நிகழ்வு அண்மையில் (09.05.2026) சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார். கட்டுரைத் தொகுப்பாக வெளிவந்திருக்கும் “நயம் பேசு” நூலிற்கான அறிமுக உரையினை சர்வேஸ்வரன் வில்வரசன் அவர்களும், நூல் நயப்புரையினை கோப்பாய் ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர் வேல் நந்தகுமார் அவர்களும் வழங்கினர். தத்துவக் கலாநிதி சிவஸ்ரீ அமிர்த ஸ்ரீகாந்தக் […]
ஆயுதங்கள் மௌனிக்கும் போது, பேனா முனைகளே வரலாற்றைப் பேசுகின்றன: சிறீதரன் எம்.பி தெரிவிப்பு!

”ஆயுதங்கள் மௌனிக்கும் போது, பேனா முனைகளே வரலாற்றைப் பேசுகின்றன. தமிழரின் விடுதலைப் பயணம் என்பது வெறும் களப்போராட்டம் மட்டுமல்ல, அது ஒரு கருத்தியல் போர். அந்தப் போரில் நமது வலிகளையும், தியாகங்களையும், நீதிக்கான தாகத்தையும் உலகிற்கு உரக்கச் சொல்லும் வலிமை எழுத்திற்கு உண்டு” எனப் புதுக்குடியிருப்பில் நடைபெற்ற “தேவதைகளின் விரல்கள்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். புதுக்குடியிருப்பு என்பது வெறும் நிலப்பரப்பு அல்ல; அது தமிழீழ விடுதலைப் […]
”பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது!

தமிழீழத் தேசியத் தலைவரால் “பாசறைப் பாணர்” விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்ட தமிழீழத் தேசிய எழுச்சிப் பாடகர் தேனிசை செல்லப்பா அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நேற்று(10) இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது. இந்நினைவேந்தல் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் உரையாற்றும்போது,”தேனிசை செல்லப்பா என்பவர் வெறும் கலைஞர் மட்டுமல்ல, அவர் எமது ஈழ விடுதலைப் போராட்டத்தின் விடுதலை உணர்வை ஆழமாக விதைத்த ஒரு உன்னத மனிதர். தமிழகத்தில் பிறந்து […]
உழவர் ஒன்றிய விளையாட்டுக் கழகத்தின் தேசிய சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது!

உழவர் ஒன்றிய விளையாட்டுக் கழகமும் சனசமூக நிலையமும் இணைந்து நடாத்திய தேசிய சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வும் மகிழ்வூட்டும் விளையாட்டுப் போட்டிகளும் அண்மையில் கழக மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றன. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்து சிறப்பித்ததோடு, கபடிப் போட்டியில் தேசிய ரீதியில் சாதனை படைத்த கிளி/சிவநகர் அ.த.க பாடசாலை மாணவர்களுக்கான மதிப்பளிப்பையும் கௌரவிப்பையும் வழங்கினார். தொடர்ந்து, மகிழ்வூட்டும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வு […]
கிளிநொச்சியில் சிறப்புற நடைபெற்ற “பெண் எனும் சுயம்பு” கவிதை நூல் வெளியீடு!

கவிஞர் தனுசா மகேந்திரரத்தினம் அவர்களின் “பெண் எனும் சுயம்பு” கவிதை நூல் வெளியீட்டு விழா அண்மைய தினம்(2026/05/01) கிளிநொச்சியில் சிறப்புற நடைபெற்றது. இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்து சிறப்பித்ததோடு, கவிதை நூலினையும் வெளியீடு செய்து வைத்தார். சிறகுகள் முளைத்த சொற்களோடும், சிந்தனை நெறிக்கும் வரிகளோடும், பெண்மையின் வலியையும் வாழ்வியலையும் பேசும் சிறந்த நூலாக இந் நூல் அமைந்தமை சிறப்புக்குரியது. கிளிநொச்சி K.K. மண்டபத்தில் […]
தீபச்செல்வனின் புத்தகங்கள் முடக்கம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய சிறீதரன் எம்.பி! (Video)

தமிழ் மக்கள் மீது ஒரு வலிந்த யுத்தத்தை நடத்தி, அந்த யுத்தத்தை நியாயப்படுத்துவதற்காக கோத்தபாயவைப் புகழ்ந்து பாடியவர்களுடைய புத்தகங்கள் எல்லாம் இந்த நாட்டில் தாராளமாக உலாவருகின்றன. அவருக்காகப் புகழ்ந்து பேசுகின்ற அது தமிழ் எழுத்தாளர்களாக இருக்கலாம், சிங்கள எழுத்தாளர்களாக இருக்கலாம், அரசாங்கத்தைப் புகழ்ந்து பாடினால், கொலைகளை நியாயப்படுத்தி எழுதினால் அந்தப் புத்தகங்கள் உலாவருகின்றன. ஆனால் தீபச்செல்வன் போன்ற தமிழர்களுடைய உண்மைகளை வெளியே கொண்டு வந்தவருடைய ஐந்து வகையான 320 புத்தகப் பிரதிகள் இப்பொழுதும் சுங்கப் பிரிவிலே தடுத்து […]
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு சிறீதரன் எம்.பி. வாழ்த்து!

”தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் ஒரு பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி, மிகப்பெரிய சரித்திர வெற்றியைப் பதிவு செய்து, முதலமைச்சராகத் தெரிவாகியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், அன்புச் சகோதரர் விஜய் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். புதுமுக அரசியல் கட்சியாகப் புரட்சிகர அரசியல் பிரவேசத்தை ஆரம்பித்து, பல்வேறு நெருக்கடிகளையும் சோதனைகளையும் கடந்து, தமிழக மக்களின் ஒட்டுமொத்த ஆதரவைப் பெற்றுள்ளீர்கள். மக்கள் உங்களுக்கு வழங்கியுள்ள இந்த ஆணையை, தமிழகத்தின் வளர்ச்சிக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்கும் பயன்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு […]
”நீலகாமம்” போராட்டத்திற்கு எமது முழுமையான ஆதரவு: சிறீதரன் எம்.பி. உறுதி!

“நாம் நீலகாமம்” அறவழிப் போராட்டத்திற்கு எமது முழுமையான பங்களிப்பை வழங்குவோம் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உறுதிபடத் தெரிவித்துள்ளார். நீலகாமம் மக்களுக்கு நீதி கோரியும், மலையக மக்களுக்கு காணி உரிமை விரைவில் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும், நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் உள்ளிட்ட மலையகத் தலைமைகளின் ஒருங்கிணைப்பில் கொழும்பில் நாளைய தினம் நடைபெறவுள்ள போராட்டம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ”மலையகம் நீலகாமம் தோட்டத்தில் அட்டூழியக் […]
தமிழ்த் தேசிய மே நாள் பிரகடனம்- 2026

”யாமார்க்கும் குடியல்லோம்” என்ற கருப்பொருளில், கிளிநொச்சி மாவட்ட தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைந்த ஏற்பாட்டில் பேரெழுச்சியாய் நடைபெற்ற தமிழ்த் தேசிய மே நாள் நிகழ்வில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் நிகழ்த்திய மே நாள் பிரகடனப் பேருரையின் முழு வடிவம். தமிழ்த் தேசிய மே நாள் பிரகடனம்- 2026 ‘உழைப்பு, உயர்வு, உயர்தர வாழ்வு, பொருளாதாரப் பெருக்கம்’ என்ற கூட்டு எண்ணக்கருவின் பெறுபேறாக உருவாகிய மே நாள்; இன்று உலகனைத்தும் கொண்டாடப்படுகிறது. மனித […]
தமிழ்த் தேசிய மே நாள் நிகழ்வு!!! 🔴LIVE

யாமார்க்கும் குடியல்லோம்” என்ற கருப்பொருளில், கிளிநொச்சி மாவட்ட தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைந்த ஏற்பாட்டில் பேரெழுச்சியாய் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழ்த் தேசிய மே நாள் நிகழ்வு.
சோரன்பற்று சரஸ்வதி சனசமூக நிலைய அடிக்கல் நாட்டு விழா!

சோரன்பற்று, சரஸ்வதி சனசமூக நிலைய அடிக்கல் நாட்டு விழா அண்மையில் (26.04.2026) மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்து கொண்டு, சனசமூக நிலையத்திற்கான அடிக்கல்லினை நாட்டினார். சரஸ்வதி சனசமூக நிலையத்தின் தலைவர் திரு. கைலாயபிள்ளை சிந்துஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன், கமநல சேவைத் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் […]