Archive

Tag: <span>Kilinochchi</span>

June 26, 2026

“தென்னந்தோப்புகளை அழித்து காற்றாலைகளா?” நாடாளுமன்றத்தில் சிறீதரன் எம்.பி (VIDEO)

இன்றைய தினம் வலுசக்தி மற்றும் மின்சாரம் தொடர்பான இந்த விவாதத்தின் பொழுது, மிக முக்கியமாக நாட்டிலே இயற்கையின் வழியிலே நீங்கள் மின்சாரங்களைப் பெறுவதும், ஏற்கனவே இருக்கின்ற நீர் மின்சாரத்தின் ஊடாகவும் நாட்டினுடைய மின்சாரத் தேவைகள் பூர்த்தி […]

June 26, 2026

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களை நேரில் சந்தித்த சிறீதரன் எம்.பி!

இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவருமான மாண்புமிகு தொல். திருமாவளவன் அவர்களை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். குறித்த […]

June 24, 2026

தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசை சந்தித்த சிறீதரன் எம்.பி!

​”தமிழ்நாடு மாநிலத்தின் சமூக நீதித்துறை அமைச்சரும், நீண்டகால அரசியல் செயற்பாட்டாளரும், ஈழத்தமிழ் மக்களுடைய விடுதலையோடு இரண்டறக் கலந்தவருமான மாண்புமிகு அமைச்சர் வன்னி அரசு அவர்களை, அவருடைய அமைச்சு அலுவலகத்தில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற […]

June 23, 2026

கரைச்சிப் பிரதேச சபையின் நிதியொதுக்கீட்டில் புதிய ஆயுர்வேத மருந்தகம் திறப்பு!

“ஈழத் தமிழர்களின் பாரம்பரிய மருத்துவ முறையான ஆயுர்வேதம் என்பது வெறும் நோய் தீர்க்கும் கலை மட்டுமல்ல; அது எமது மண்ணோடும், மரபோடும், இயற்கை வளங்களோடும் பிணைக்கப்பட்ட எமது தனித்துவ அடையாளத்தின் பிரிக்க முடியாத ஒரு குறியீடாகும்” […]

June 20, 2026

வடக்கு – கிழக்கு மாகாண சபையின் பொறுப்புகளைப் போராளிகளிடம் ஒப்படையுங்கள்: சிறீதரன் எம்.பி அறைகூவல்! (VIDEO)

“நாம் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து, வடக்கு – கிழக்கு மாகாண சபையின் பொறுப்புகளைப் போராளிகளிடம் ஒப்படைத்து, சிறந்ததொரு அரசியல் சூழலை உருவாக்குவதற்கும், அதற்காக முன்னின்று உழைப்பதற்கும் நான் தயாராக இருக்கிறேன். இத்தகைய வரலாற்றுப் பணியைச் செய்ய […]

June 18, 2026

மாணவர்கள் அனைவரும் அதிமானிடக் கோட்பாட்டை நோக்கி நகர வேண்டும் என சிறீதரன் எம்.பி. தெரிவிப்பு…!

“மனிதன் என்பது விலங்குக்கும் அதிமானிடனுக்கும் இடையே கட்டப்பட்ட ஒரு கயிறு. அத்தகைய பலவீனங்களாலும் எதிர்மறைச் சிந்தனைகளாலும் கட்டப்பட்ட அந்தக் கயிற்றை அறுத்து, நாம் அதிமானுடர்களாக நிமிர வேண்டும்” என மாணவர் சமுதாயத்தின் முன்னிலையில் இலங்கைத் தமிழ் […]

June 15, 2026

மயிலிட்டி மக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்!

யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி மயிலிட்டி மக்கள் இன்றைய தினம் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, வடக்கு மாகாண ஆளுநரிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை உத்தியோகபூர்வமாகக் கையளித்துள்ளனர். கடந்த […]

June 12, 2026

35 ஆண்டுகால நில ஆக்கிரமிப்பும் மீனவர்களின் அவலமும்: நாடாளுமன்றத்தில் ஒலித்த தமிழ் மக்களின் குரல்! (VIDEO)

மிக முக்கியமாக கடந்த மே மாசம் 27ஆம் தேதி புதன்கிழமை யாழ்ப்பாணம் மாவட்டத்தினுடைய பருத்தித்துறை முனை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு சென்றிருந்தார்கள். அந்த மீனவர்களிலே நான்கு பேர் இதுவரை இன்னும் வீடு திரும்பவில்லை. அரசாங்கத்தினால் […]

June 10, 2026

இலங்கை மற்றும் மாலதீவுகளுக்கான சுவிட்சர்லாந்து நாட்டின் தூதுவரை சந்தித்து, நன்றி தெரிவித்த சிறீதரன் எம்.பி!

கடந்த ஞாயிற்றுக்கிழமை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள், இலங்கை மற்றும் மாலதீவுகளுக்கான சுவிட்சர்லாந்து நாட்டின் தூதுவரான டாக்டர் சிரி வோல்ட் (Dr. Siri Walt) அவர்களை சந்தித்து, அவரது […]

June 10, 2026

சங்கீத்சனின் விடுதலை விவகாரம்: ஜனாதிபதி அநுர – சிறிதரன் எம்.பி இடையே தொலைபேசி உரையாடல்!

சொல்லிசைக் கலைஞரான சங்கீத்சனின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமாரவுக்கும், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரனுக்கும் இடையில் தொலைபேசி உரையொன்று நடைபெற்றுள்ளது. குறித்த உரையாடலுக்கு அமைவாக, சங்கீத்சனுக்கு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுப்புக்காவல் […]

June 9, 2026

“வடக்கு கிழக்கு தழுவிய மாபெரும் போராட்டம் வெடிக்கும்!” நாடாளுமன்றத்தில் சிறீதரன் எம்.பி (VIDEO)

இன்றைய தினம் அவசர கால சட்டத்தோடு சேர்ந்த வகையில் நீடிப்பு செய்வதற்கான பிரேரணையை ஜனாதிபதியினால் கொண்டுவரப்பட்டிருக்கிற இந்த சூழலில், இந்த நாட்டிலே பல்வேறுபட்ட துயர நிகழ்வுகளும் துன்பங்களும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஊடாக கொண்டுவரப்பட்டிருக்கிற இந்த காலச்சூழல் […]

June 8, 2026

யாழ் சிறையில் உள்ள சொல்லிசைப் பாடகர் சங்கீத்சனை நேரில் சந்தித்தார் சிறீதரன் எம்.பி!

எழுச்சிப் பாடல் பாடி, அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைப் பாடகர் கணேஸ்குமார் சங்கீத்சனை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் […]