பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சொல்லிசைக் கலைஞனை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி கடிதம்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார் சங்கீத்சன் அவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஜனாதிபதிக்கு விசேட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், “பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள உதயநகர் மேற்கு, கிளிநொச்சியை நிரந்தர முகவரியாகக் கொண்ட சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார் சங்கீத்சன் அவர்களின் விடுதலை தொடர்பான விடயத்தினை தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டுவருகின்றேன். தனது இனத்தின் […]
பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக எழுச்சி கொண்டது தமிழர் தாயகம்! சொல்லிசைக் கலைஞனை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

அரச பயங்கரவாதத்தின் கீழ், பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தித் திட்டமிட்டுக் கைது செய்யப்பட்டுள்ள தாயகக் கலைஞனை விடுவிக்கக் கோரி, மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்றைய தினம் கிளிநொச்சி பழைய கச்சேரி முன்பாகப் பெரும் திரளான இளைஞர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது. ”குரல்வளையின் விலங்குடைக்க அணிதிரள்வோம்” என்னும் பொருண்மையில், கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் சங்கீத்சனை விடுதலை செய்யக் கோரியும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் ஊடாகத் தமிழர்கள் மீது நிகழ்த்தப்படும் இன அடக்குமுறைகளைக் கண்டித்தும், கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புகளின் […]
தமிழர்களுக்கு நடந்தது இனப்படுகொலையே: அருட்தந்தை ஜீவந்த பீரிஸின் கருத்தை வரவேற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்!

சகோதர இனத்தைச் சேர்ந்த அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் அவர்கள் கடந்த மே 18ஆம் தேதி கொழும்பிலே நடைபெற்ற மே 18 இன அழிப்பு நாளை மிக பகிரங்கமாக, இலங்கையிலே தமிழர்கள் மீது புரியப்பட்டது இனப்படுகொலை என்பதை வெளிப்படையாகக் கூறியிருந்தார். சிங்கள மக்களிடமிருந்து இவ்வாறான ஒரு கருத்து வெளிவருதல் என்பது மிக அருமை. அது மிகவும் ஆரோக்கியமான ஒரு கருத்தை அவர் சொல்லியிருக்கின்றார் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார். […]
சுதந்திரமாக பேசவோ, பாடவோ முடியவில்லை: கிளிநொச்சி இளைஞன் கைதுக்கு சிறீதரன் எம்.பி அதிருப்தி!

சுதந்திரமாக பேச முடியவில்லை, சுதந்திரமாக பாட முடியவில்லை. அண்மையில் கூட கிளிநொச்சியைச் சேர்ந்த ஒரு மாணவன், ஒரு இளைஞன், அவர் தன்னுடைய சுயமாக இயற்றிப் பாடிய ஒரு பாடலை சிங்கள மொழியிலே அதற்கு பல வியாக்கியானங்கள் வழங்கப்பட்டு, இன்று அவர் கைது செய்யப்பட்டு, 16 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், அவ்வளவு தூரம் தொடர்ச்சியாக தமிழ் […]
சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு சிறீதரன் எம்.பி விஜயம்!

யாழ். வலிகாமம் மேற்கு பிரதேச செயலக பிரிவில் இயங்கும் சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு இன்றைய தினம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது, வைத்தியசாலையின் குறை நிறைகளை கேட்டறிந்து கொண்டதுடன், நோயாளர் விடுதி உள்ளிட்ட வைத்தியசாலையின் வெளி வளாகப் பிரதேசங்களையும் அவர் நேரில் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து, சங்கானை பிரதேச வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக தரம் உயர்த்துவது தொடர்பாக தன்னாலான முழுமையான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என […]
பேராசிரியர் கந்தையா தேவராஜா அவர்களின் பவள விழா நிகழ்வில் சிறீதரன் எம்.பி!

யாழ். பல்கலைக்கழக வணிகத்துறையின் முதலாவது பேராசிரியர் கந்தையா தேவராஜா அவர்களின் பவள விழா அண்மையில் யாழ். இணுவில், நடராசசேகரப் பிள்ளையார் கோயில் வீதியில் உள்ள விசேட மண்டபத்தில் அண்மையில்(2026/05/24) நடைபெற்றது. இந்நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்துகொண்டு, “தேவாமிர்தம்- 4” எனும் பவளவிழா மலரை வெளியிட்டு வைத்து, வாழ்த்துரை வழங்கினார். இதன்போது, கல்வித்துறையிலும், சமூகப் பணியிலும், பண்பாட்டு வளர்ச்சியிலும், மனிதநேயச் சேவைகளிலும் பல தசாப்தங்களாக அர்ப்பணிப்புடன் செயலாற்றி வரும் பவள […]
காணி விடுவிப்பில் காலத்தை இழுத்தடிக்காது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: சிறீதரன் எம்.பி கோரிக்கை!

காணி விடுவிப்பு தொடர்பில் காலங்களை இழுத்தடிக்காது , மக்களின் நியாமான கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி செவி சாய்த்து உடனடியாக காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கோரியுள்ளார். மயிலிட்டி பகுதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காணி விடுவிப்பு கோரி நடைபெற்ற கறுப்புக்கொடி ஏந்திய போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யுத்தம் காரணமாக 36 வருடங்களுக்கு முன்னர் வலி. வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் […]
பூநகரி முன்பள்ளி மாணவர்களின் கால்கோள் விழா: நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் பங்கேற்பு!

பூநகரி முன்பள்ளி மாணவர்களுக்கான கால்கோள் நிகழ்வும் கௌரவிப்பு விழாவும் அண்மையில் (2026/05/25)பூநகரி முன்பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார். இதன்போது உரையாற்றிய அவர், “கல்வி என்னும் உன்னத பயணத்தின் முதல் அடியை எடுத்து வைக்கும் இந்த மழலைகள்தான் நம் தேசத்தின் எதிர்காலத் தூண்கள். நாம் இவர்களுக்கு வழங்கும் முறையான கல்வியும் நல்லொழுக்கமுமே, இவர்களை பட்டதாரிகளாக மாத்திரமன்றி, எதிர்காலத்தில் நம் சமூகத்தை […]
“கல்வியே எமது இனத்தின் முதன்மை ஆயுதம் : நாளைய தலைவர்கள் மத்தியில் சிறீதரன் எம்.பி தெரிவிப்பு…!

”எமது இனத்தின் விடுதலைப் பயணமும், வாழ்வுரிமைக்கான போராட்டமும் எப்போதுமே கல்வியை முதன்மை ஆயுதமாகக் கொண்டே நகர்ந்திருக்கிறது” என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். புலமைப்பரிசில் பரீட்சையில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில் வழங்கல் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு, நாளைய தலைவர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். “எத்தனையோ இழப்புகளையும் சவால்களையும் கடந்து வந்துள்ள எமது சமூகம், இன்று நிமிர்ந்து நிற்பதற்கும் நாளை உலக அரங்கில் தலைநிமிர்வதற்கும் உங்களைப் […]
மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தை சந்தித்தார் சிறீதரன் எம்.பி!

மேனாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வல்வெட்டித்துறை நகரசபையின் கௌரவ தவிசாளருமாகிய எம்.கே. சிவாஜிலிங்கம் அவர்களை நேற்று(25) இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் சந்தித்தார். இதன்போது, வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் திரு. சபேசன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் யாழ்ப்பாண மாவட்ட இணைப்பாளர் செல்வன், வட்டுக்கோட்டை தொகுதியின் இணைப்பாளரும் மேனாள் பிரதேச சபை உறுப்பினருமான சசிதரன் ஆகியோர் உடனிருந்தனர்.
”கல்வியே எமது சமூகத்தின் ஆகச்சிறந்த ஆயுதம்” – மாணவர்கள் மத்தியில் சிறீதரன் எம்.பி தெரிவிப்பு!

”எத்தனையோ சவால்களுக்கும் நெருக்கடிகளுக்கும் மத்தியிலும், கல்வியே எமது சமூகத்தின் ஆகச்சிறந்த ஆயுதம் என்பதனை நிரூபித்து, விடிவை நோக்கிய எமது பயணத்திற்கு புதிய நம்பிக்கையை நாம் கட்டமைக்க வேண்டும்” என கிளி/ கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற புலமைப் பரிசில் பாராட்டு விழா நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சிவஞானம் சிறீதரன் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார். ”ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் வரலாற்றுச் சாதனை படைத்து, இந்த மண்ணிற்கும் நமது சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ள உங்கள் […]
பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான மாணவர்களுக்கு நிதியுதவி!

சுவிஸ்சர்லாந்து வாழ் வர்த்தகரின் நிதிப் பங்களிப்பில், பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான மாணவர்களுக்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு கல்லூரியின் அதிபர் வணக்கத்துக்குரிய அருட்தந்தை அன்ரன் அமலதாஸ் அடிகளார் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்துகொண்டு, யாழ். ஊர்காவற்றுறை புனித அந்தோணியார் கல்லூரியிலிருந்து 2025 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை மூலம் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான 13 மாணவர்களுக்கான நிதி அன்பளிப்பை வழங்கினார். இதன்போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர், “யுத்தத்தினால் […]