செல்வாநகர் இளைஞர்களுடனான சந்திப்பு!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள், நேற்றைய தினம் செல்வாநகர் பகுதி இளைஞர்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றில் பங்கேற்று, அவர்களுடன் ஆக்கபூர்வமான கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபட்டார். இக்கலந்துரையாடலின் போது, இளைஞர்கள் தமது கிராமத்தின் எதிர்கால முன்னேற்றம், சமூகத்தின் நிலையான அபிவிருத்தி மற்றும் இளைஞர்களின் பங்களிப்பை வலுப்படுத்தும் வழிமுறைகள் தொடர்பாக பல்வேறு ஆக்கபூர்வமான கருத்துகளையும் முன்மொழிவுகளையும் முன்வைத்தனர். அதேவேளை, கிராமத்தின் தற்போதைய தேவைகள், நிலவும் குறைபாடுகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் குறித்து நாடாளுமன்ற […]
காணி விடுவிப்புத் தொடர்பில் மயிலிட்டி மக்களுடன் கலந்துரையாடிய சிறீதரன் எம்.பி!

வலிகாமம் வடக்கு காணி விடுவிப்புத் தொடர்பாக, மயிலிட்டி மக்கள் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களுடன் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டனர். பலாலி விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தை முன்னிறுத்தி, மயிலிட்டி மக்களின் பூர்வீகக் காணிகளை அரசாங்கம் சுவீகரிப்பதற்காக அண்மையில் அனுப்பப்பட்டுள்ள எழுத்துமூல அறிவித்தல்கள் தொடர்பில், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களிடம் தமது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினர். பல தலைமுறைகளாகத் தாம் வாழ்ந்து வந்த பூர்வீகக் காணிகளே தங்களது […]
பச்சிலைப்பள்ளி பிரதேச சபை முன்பள்ளி மாணவர்களின் ‘செயற்பட்டு மகிழ்வோம்’ நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது!

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் முன்பள்ளி மாணவர்களுடைய வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்வு அண்மையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். பளை நகர விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் கௌரவ தவிசாளர், வழக்கறிஞர் சுப்பிரமணியம் சுரேன், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், சமுர்த்தி உத்தியோகத்தர், கிராம அலுவலர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தீவுப்பகுதி வீதிகள் புனரமைப்பு: எம்பி சிறீதரனின் கேள்விக்கு நாடாளுமன்றத்தில் அமைச்சர் பதில்!

யாழ்ப்பாணம் தீவுப்பகுதி வீதிப் புனரமைப்பு குறித்து இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்றையதின்ம்(22) நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் பிமல் இரத்நாயக்க பதிலளித்துள்ளார். யாழ்ப்பாணம், வேலணைத் துறையிலிருந்து புங்குடுதீவு வரையான 4 கிலோமீட்டர் கடல்வழிக் கூட்டுப்பாதை (Causeway) உள்ளிட்ட வீதி அபிவிருத்திப் பணிகள் எதிர்வரும் 2027-ஆம் ஆண்டுக்குள் முழுமையாக நிறைவு செய்யப்படும் என அமைச்சர் பிமல் இரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள் எழுப்பிய வாய்மொழி மூல வினாக்களுக்குப் […]
தமிழினத்தை வழிநடத்தும் தலைவர்களாக அடுத்த தலைமுறையினர் வளர்த்தெடுக்கப்பட வேண்டும்: சிறீதரன் எம்.பி தெரிவிப்பு….!

எமது தமிழ்ச் சமூகத்தின் வேர்களும் வெளிச்சமுமாகத் திகழும் குழந்தைகளுக்கு கல்வியை மட்டும் போதிக்காமல், சொந்த மண்ணின் வரலாறு, தன்னம்பிக்கை மற்றும் தாய்மொழிப் பற்றோடு எமது மண்ணின் உரிமைகளையும் பண்பாட்டையும் உணர்ந்து, தமிழினத்தை வழிநடத்தும் தலைவர்களாக அடுத்த தலைமுறையினர் வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என வல்வெட்டித்துறை, திருமகள் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போது, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்தார். சமூகத்திற்கு நல்வழி காட்டும் முன்மாதிரிகளாக […]
அராலி தெற்கு களவத்துறை விளையாட்டுக்கழகத்தின் 79 வது ஆடி விழா!

தமிழர் பாரம்பரியத்தைத் தொடர்ச்சியாகப் பேணிவரும் யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை அராலி தெற்கு, களவத்துறை விளையாட்டுக்கழகம் நடத்திய 79-வது ஆடி விழா விளையாட்டு நிகழ்வில் (19.07.2026) முதன்மை விருந்தினராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார். இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் அராலி தெற்கு வட்டார கௌரவ பிரதேச சபை உறுப்பினர் சண்முகலிங்கம் சபேசன், ஓய்வுநிலை அதிபர் சிவஞானபோதன், விளையாட்டு உத்தியோகத்தர் மற்றும் கிராம அலுவலர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
“மீனாட்சி அருளமுதம்” எனும் பாடல் இறுவட்டு வெளியீடு!

கிளிநொச்சி, ஜெயந்திநகர் திருவருள்மிகு மீனாட்சி அம்பாள் திருக்கோயில் திருக்குடமுழுக்கைச் சிறப்பிக்கும் வண்ணம் ‘மீனாட்சி அருளமுதம்’ எனும் பாடல் இறுவட்டு வெளியீடானது கடந்த வெள்ளிக்கிழமை(17) ஆலய வளாகத்தினுள் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்துகொண்டு, இறுவட்டினை வெளியீடு செய்து வைத்ததுடன் முதற்பிரதியையும் வழங்கிவைத்தார். மனோன்மணி ஆறுமுகம் குடும்பத்தின் தயாரிப்பில், பத்மயன் சிவா அவர்களின் இசையமைப்பில், அன்பினிய பிரியன் அவர்களது வரிகளில், சிவஸ்ரீ ஜெயந்தன் குருக்களது […]
தொடர் போராட்டத்தை நடாத்தி வரும் கேப்பாப்புலவு மக்களை சந்தித்தார் சிறீதரன் எம்.பி!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கேப்பாப்புலவில், இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் கடந்த சனிக்கிழமை(18) 26வது நாளாகவும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேப்பாப்பிலவு மக்களின் குறித்த 26 ஆம் நாள் போராட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் அவர்களும் இன்றைய தினம் பங்கேற்றார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனும் சிவஞானம் […]
உதவித்திட்டம் வழங்கிவைப்பு: இளைஞர்களின் முயற்சியைப் பாராட்டிய சிறீதரன் எம்.பி!

ஈழ நாடு அமைப்பின் சார்பாக, செல்வன் சுகந்தன் திவியன் அவர்களது நிதி அன்பளிப்பில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஊடாக, பொருளாதார ரீதியாக நலிவுற்ற மக்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டம் அண்மையில் வழங்கிவைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைத்த இளைஞர்கள், “நீண்ட நாட்களாகவே இந்த சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணியிருந்தோம். அது இப்போது கைகூடியிருப்பது எங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியைத் தருகிறது” எனக் குறிப்பிட்டனர். உதவிகளை வழங்கிவைத்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் […]
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடனான விசேட கலந்துரையாடல்!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர்களுடனான விசேட கலந்துரையாடல், கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் காரியாலயமான ‘அறிவகத்தில்’ நேற்றைய தினம் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலின் போது வட்டார ரீதியாக முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் குறித்தும், தற்போதைய அபிவிருத்திப் பணிகளின் அடைவு மட்டங்கள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.” அத்துடன் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்ட விடயங்கள் தொடர்பாகவும், தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற […]
மென்பந்தாட்ட இறுதிச் சமரில் சிறீதரன் எம்.பி பங்கேற்பு!

அறத்திநகர் சாலை விளையாட்டு கழகம் நடத்திய, பச்சிலைப்பள்ளி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கழகங்களுக்கிடையிலான மாபெரும் மென்பந்து துடுப்பாட்ட சுற்றுப்போட்டியின் இறுதி நிகழ்வில், பிரதம விருந்தினராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்துகொண்டார். இன்றைய இளையோர் மத்தியில் அதிகரித்து வரும் போதைப் பழக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், அவர்களை நல்வழிப்படுத்தவும் இதுபோன்ற விளையாட்டுப் போட்டிகள் சிறந்ததொரு கருவியாக விளங்குகின்றன எனக் குறிப்பிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். இந்நிகழ்வில் பச்சிலைப்பள்ளி […]
முன்னாள் கர்நாடக துணை முதல்வரை சந்தித்த சிறீதரன் எம்.பி!

கர்நாடக மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வர் கே. எஸ். ஈஸ்வரப்பா அவர்களை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள், கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள அவரது பிரத்தியேக இல்லத்தில் நேரில் (2026/07/04) சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது, ஈழத்தமிழர்களின் நியாயமான அரசியல் தீர்வை எட்ட வேண்டுமாயின், இந்திய மத்திய மற்றும் மாநில அரசுகளின் காத்திரமான பங்களிப்பும் அழுத்தங்களும் தற்போதைய சூழலில் மிக அவசியமானவை என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இங்கு வலியுறுத்தினார். மேலும், இந்திய […]